பறக்கும் ரயிலில் தீ விபத்து: அதிகாரிகள் குழு விசாரணை

By செய்திப்பிரிவு

பறக்கும் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழு விசாரணையை தொடங்கியது.

சென்னை வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு நேற்று முன்தினம் காலை 8.25 மணிய ளவில் புறப்பட்ட பறக்கும் ரயில், பெருங்குடி ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது அதன் நடுப் பகுதி இன்ஜினில் தீப்பிடித்தது. அதைப் பார்த்ததும் பயணிகள் அலறியடித்து ஓடினர். இந்த விபத்தில் பயணிகள் யாரும் காய மடையவில்லை. இருப்பினும் ஓடும் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது ரயில் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் அனுபம் ஷர்மா, ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஜான் தாமஸ், முதன்மை மின் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ரயில் இன்ஜின் ஓட்டுநர் மற்றும் கார்டிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய 4 பேர் கொண்ட உயர் அதிகாரிகளின் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்