தமிழறிஞர் முத்துசாமிக்கு ரூ. 5 லட்சம் பரிசு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டம் ஆர்.புதுப் பட்டியைச் சேர்ந்த தமிழறிஞர் முத்துசாமிக்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அறக்கட்டளை யிலிருந்து ரூ. 5 லட்சம் பரிசும், மாதம் ரூ. 5 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:

நாமக்கல் மாவட்டம் ஆர்.புதுப் பட்டியைச் சேர்ந்த திரைப்பட பாடலாசிரியரும், தமிழறிஞருமான பி.கே.முத்துசாமி (96) தமிழ்த் திரையுலகில் பல ஆண்டுகள் பணி யாற்றி பல முன்னோடி சாதனை களைப் படைத்தவர்.

அவரது திரைப்பட பாடல்கள் காலத்தால் அழியாதவை. ‘புரட்சித் தலைவியின் புரட்சிக் காப்பியம்’, ‘புரட்சித் தலைவி அந்தாதி’ ஆகிய நூல்களை எழுதியுள் ளார்.

96 வயதிலும் தொடரும் அவரது ஆர்வத்தை பாராட்டி புரட்சித் தலை வர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை யிலிருந்து ரூ. 5 லட்சம் பரிசும், மாதம் ரூ. 5 ஆயிரமும் வழங்க முதல் வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள் ளார்.

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

49 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்