தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடியாக தக்காளி, உருளை, வெங்காயம் கொள்முதலை அனுமதியுங்கள்: முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு கிடைக்கும் இடங்களில் நேரடியாக கொள்முதல் செய்து, மக்களுக்கு அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டம் கடந்த 2018-19 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு விலையை கட்டுப்படுத்தி, விநியோகிக்க ரூ.500 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கேரளாவை பொருத்தவரை சப்ளைகோ, ஹார்ட்டிகார்ப், கன்ஸ்யூமர்பெட் ஆகிய முகவர் அமைப்புகள் மூலம், தமிழகத்தில் உள்ள விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் சங்கங்களிடம் இருந்து தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கை நேரடியாக கொள்முதல் செய்வதுடன், அவர்களுக்கு உரிய விலை வழங்கி வருகிறது.

இந்த 3 அமைப்புகளும் தமிழகத்தில் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் சங்கங்களிடம் இருந்து இவற்றை நேரடியாக கொள்முதல் செய்ய வசதி செய்துதர வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில்பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

51 mins ago

வாழ்வியல்

2 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

வாழ்வியல்

20 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

மேலும்