பெண்களை இழிவுபடுத்தி பேசுபவர்களுக்கு ஆதரவு தரும் ஸ்டாலினுக்கு பெண்கள் பாடம் புகட்டுவர்: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கருத்து

By செய்திப்பிரிவு

பெண்களை இழிவுபடுத்தி பேசுபவர்களுக்கு ஆதரவு அளிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பெண்கள் உரிய நேரத்தில் பாடம் புகட்டுவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் திட்டங்கள், சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லவும், இந்து கடவுள்களை இழிவுபடுத்துபவர்களைக் கண்டித்தும் நவம்பர் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை மேற்கொள்கிறார். அதற்கான காப்பு கட்டுதல் என்ற நிகழ்ச்சி சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் முருகன் கூறியதாவது:

பட்டியலின சமுதாயத்தினரை அவமதித்து திமுக எம்.பி.க்கள்பேசியதை ஸ்டாலின் கண்டிக்கவில்லை. முருகப் பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களில் ஒருவர் திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் இருந்தவர். அவர்களுக்கு திமுகவழக்கறிஞர் அணியில் இருப்பவர்கள் உதவி செய்தனர். எனவே, இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் கூட்டத்தின் பின்னணியில் திமுக இருப்பது உறுதியாகியுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மனுஸ்மிருதியில் இருப்பதாகக் கூறி இந்து பெண்களை இழிவுபடுத்தி பேசியிருக்கிறார். இந்தியாவில் அனைவரும் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டத்தைதான் பின்பற்றி வருகிறோம். மனுஸ்மிருதி என்று எதுவும் நடைமுறையில் இல்லை. இல்லாத ஒன்றை தடை செய்யக் கோருவது வேடிக்கை.

அதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். பெண்களை இழிவுபடுத்தியவர்களுக்கு ஆதரவு அளிக்கும் அவருக்கு பாஜக மகளிர் அணியினர் தக்க நேரத்தில் தக்க பாடம் புகட்டுவர். அவர் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்