இலங்கை தாதாக்கள் தமிழகத்தில் பதுங்கலா? - அகதி முகாம்களில் தீவிர விசாரணை

By செய்திப்பிரிவு

இலங்கையில் கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட அங்கொட லொக்கா என்பவர், தமிழகத்தில் தலைமறைவாக இருந்துவந்தார். அவர், கடந்த ஜூலை மாதம் கோவையில் மர்ம மான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கை தமிழக சிபிசிஐடி போலீ ஸார் விசாரித்து வருகின்றனர். இதேபோல, போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய இலங் கையைச் சேர்ந்த அலகாபெருமகா சுனில் காமினி என்ற பொன்சேகா (52), போலி பாஸ்போர்ட்டில் தமி ழகம் வந்து தலைமறைவாக இருந் தார். அவரை, கடந்த 13-ம் தேதி தமிழக கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

இலங்கையைச் சேர்ந்த பிரபல தாதாக்கள் தமிழகத்தில் பதுங்கி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த சுமார் 10 தாதாக்கள் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக சர்வ தேச போலீஸான ‘இன்டர்போல்’ எச்சரிக்கை விடுத்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பதுங்கி இருக்கும் இலங்கை தாதாக்களை பிடிக்க கியூ பிரிவு போலீஸார் தீவிரநடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கொட லொக்கா மற்றும் பொன்சேகா ஆகியோருக்கு உதவி செய்தவர்களை பிடித்து கியூ பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் இலங்கை நபர்கள் வசிக்கும் பகுதிகளிலும், முகாம்களிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் இருந்து வரும் தொலை பேசி தகவல்களை கண்காணித்து, அதனடிப்படையில் சந்தேக நபர் கள் சிலரை பிடித்து விசாரித்து வரு கின்றனர். தமிழகத்தில் தலைமறை வாக இருக்கும் இலங்கை தாதாக் களை பிடிக்கும் முயற்சியில் ஈடு பட்டுள்ள போலீஸாருக்கு தமிழ கத்தில் வசதியாக வாழும் சில இலங்கை நபர்களும் உதவி செய்து வருகின்றனர்.

இலங்கையில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தவர்களின் விவரங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். அதில், விசா காலம் முடிந்தும், திரும்பி செல்லாமல் இருக்கும் நபர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 13 பேர் விசா காலம் முடிந்தும் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் தற் போது தமிழகத்தில்தான் இருக் கிறார்களா அல்லது வேறு பகுதி களுக்கு இடம்மாறி விட்டார்களா என்று விசாரணை நடக்கிறது.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், அரசின் அனுமதி இல்லாமலும் யாரும்தங்கி இருக்கிறார்களா, முகாம்களில் அனுமதிக்கப்பட்ட நபர்களை விடவும் கூடுதலாக யாரும் தங்கி இருக்கிறார்களா என்பது குறித்தும் கியூ பிரிவு போலீஸார் மற்றும் அந்தந்த பகுதி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இலங்கை தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சிலர் கூடுதலாக இருப் பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு விசாரணை நடந்து வரு கிறது. இதுவரை தமிழகம் முழு வதும் சந்தேகத்தின்பேரில் இலங்கை தமிழர்கள் 17 பேரை பிடித்து கியூ பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். கடலோர பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

21 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

29 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

35 mins ago

ஆன்மிகம்

45 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

மேலும்