அனுமதியை புதுப்பிக்காமல் கட்டுமான பணி: திருப்போரூரில் 16 மாடி கட்டிடத்துக்கு சீல் - பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

திருப்போரூர் அடுத்த காலவாக்கம் பகுதியில், பேரூராட்சி அனுமதி யின்றி கட்டப்பட்ட 16 மாடி கட்டிடம் நேற்று சீல் வைக்கப்பட்டது.

திருப்போரூர் பேரூராட்சிக்குட் பட்ட 1-வது வார்டில் காலவாக்கம் பகுதி அமைந்துள்ளது. இங்கு, தனியார் நிறுவனம் ஒன்று 16 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை கட்டி வருகிறது. இந்த கட்டுமான பணிகளை மேற்கொள்ள பேரூராட்சி நிர்வாகம் கடந்த 2011-ம் முதல் 2014-ம் வரை அனுமதியளித்திருந்தது. ஆனால், குறிப்பிட்ட ஆண்டுக்குள் பணிகளை அந்நிறுவனம் நிறைவு செய்யவில்லை. மேலும், அனுமதியை புதுப்பிக்காமல் தொடர்ந்து கட்டுமான பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால், அனுமதியின்றி பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கட்டுமான பணிகளை நிறுத்துமாறு 30 நாட்கள் கால அவகாசத்துடன் பேரூராட்சி நிர்வாகம் கடந்த ஜூன் மாதம் நோட்டீஸ் அளித்தது. இருப்பினும் தனியார் நிறுவனம் தொடர்ந்து கட்டுமான பணிகளை மேற்கொண்டது.

இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையி லான அதிகாரிகள் மற்றும் வருவாய்துறையினர், போலீஸார் ஆகியோர் கட்டுமான பணிகளை நிறுத்தி கட்டிடத்துக்கு சீல் வைத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, திருப்போரூர் பேரூராட்சி செயல் அலுவலர் சவுந்தர்ராஜன் கூறும்போது, “கட்டுமான பணிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதிக்கான ஆணை காலாவதியான பிறகும், தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் 16 மாடி கட்டித்துக்கு சீல் வைக்கப்பட்டது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

மேலும்