ரூ. 46 கோடியில் புதிதாக 5 ஐடிஐ: முதல்வர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் ரூ.45.97 கோடியில் 5 ஐடிஐ தொடங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறி வித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் விதி 110-ன் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

பொருளாதாரத்தில் பின்தங் கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் நலனுக் காகவும் தொழில் திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்கவும் தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் ஐடிஐ-கள் தொடங்கப் பட்டுள்ளன.

தமிழகத்தில் தற்போது 77 அரசு ஐடிஐ-களில் 28 ஆயிரத்து 259 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆயிரம் மாண வர்கள் தொழில் பயிற்சி பெற விடுதி வசதியுடன் கூடிய 15 ஐடிஐ-கள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்திய தொழில் வர்த்தக கூட் டமைப்பு (அசோசாம்) நடத்திய மாநிலங்களுக்கு இடையேயான ஒப்புநோக்கு ஆய்வில் தமிழகம் முதல் இடத்தைப் பெற்று வளர்ச் சிப் பாதையில் உள்ளது. தொழில் உற்பத்தியிலும், வேலைவாய்ப்பு களை உருவாக்குவதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதனால் திறன் பயிற்சி பெற்றவர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர்.

எனவே, நடப்பாண்டில் தஞ்சா வூர் மாவட்டம் ஒரத்தநாடு, புதுக் கோட்டை மாவட்டம் விராலிமலை, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர், விழுப்புரம் மாவட்டம் திண்டி வனம் ஆகிய 5 இடங்களில் 1,000 மாணவர்கள் தொழில் பயிற்சி பெறும் வகையில் விடுதி வசதி யுடன் கூடிய ஐடிஐ-கள் ரூ.45.97 கோடியில் தொடங்கப்படும்.

தொழில் திறன் வாய்ந்த மனித வளம் அதிகரிக்கவும், தொழில் உற்பத்தி அதிகரிக்கவும் அரசின் இந்த நடவடிக்கைகள் உதவும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

34 mins ago

ஜோதிடம்

40 mins ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்