நெல்லை, தென்காசியில் வேளாண் மசோதா நகல்களை கிழித்து எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் வேளாண் மசோதா நகலை கிழித்தெறியும் போராட்டம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நடைபெற்றது.

நெல்லையில், வேளாண் மசோதா நகலை கிழித்தெறியும் போராட்டம் பாஸ்போர்ட் அலுவலகம் முன் நடைபெற்றது.

பாளையங்கோட்டை தொகுதி தலைவர் புகாரி சேட் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கனி, துணைத் தலைவர் சாகுல் ஹமீது, மாவட்ட செயலாளர்கள் முஸ்தபா, அலாவுதீன், முல்லை மஜீத், மாவட்ட பொருளாளர் ஆரிப் பாட்ஷா மற்றும் தொகுதி‌ நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட விவசாய அணி தலைவர் க் அப்துல்லா கண்டன உரையாற்றினார்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசின் 3 வேளாண் மசோதாக்களின் நகல்களை கிழித்து எறிந்தனர்.

தொகுதி துணை தலைவர் சலீம்தீன், மஹ்பூப்ஜான், இணை செயலாளர்கள் ஒ.எம்.எஸ்.மீரான், சிந்தா, ஜவுளிகாதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல், தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு, மாவட்ட பொதுச் செயலாளர் ஷேக் ஜிந்தா மதார் தலைமை வகித்தார்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வேளாண் மசோதா நகல்களை கிழித்து மத்திய அரசைக் கண்டித்து கோஷமிட்டனர்.

மாவட்டச் செயலாளர்கள் சேனா சர்தார், இம்ரான், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஷேக் முஹம்மது ஒலி, யாசர் கான், கல்வத் கனி, நகர தலைவர் செய்யது மஹ்மூத், நகர செயலாளர் பாதுஷா, எஸ்டிடியு தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஹக்கீம், மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் லுக்மான் ஹக்கீம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நகர செயற்குழு உறுப்பினர் பீர் முஹம்மது நன்றி கூறினார். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்