பன்மொழி விவாதம்: பேரவையில் கலகலப்பு

By செய்திப்பிரிவு

காங்கிரஸ், மமக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி தெலுங்கு, இந்தி, உருது மொழிகளில் பதிலளித்ததால் பேரவையில் கலகலப்பு ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக்கல்வி, உயர்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத் (ஓசூர்) இந்தி, தெலுங்கு மொழிகளில் சில பிரச்சினைகளை குறிப்பிட்டார். அதற்கு அந்தந்த மொழிகளிலேயே பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி பதிலளித்தார்.

உருது மொழியில்..

அப்போது ஆம்பூர் தொகுதி மமக எம்எல்ஏ அஸ்லம் பாஷா குறுக்கிட்டு, உருது மொழியில் பேசினார். அவருக்கு உருது மொழியில் அமைச்சர் பதிலளித்தார்.

பேரவையை நடத்திக் கொண்டிருந்த துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அப்போது குறுக்கிட்டு, ‘நீங்கள் இருவரும் தமிழிலேயே பேசுங்கள்’ என்றார். இதனால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

3 mins ago

விளையாட்டு

57 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்