அல்-காய்தா இயக்கத்துக்கு தமிழகத்தில் இருந்து பண உதவி: என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

By செய்திப்பிரிவு

அல்-காய்தா இயக்கத்துக்கு தமிழகத்தில் இருந்து பண உதவி செய்திருப்பது குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்கம், கேரளாவில் கடந்த 19-ம் தேதி என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி, அல்-காய்தா தீவிரவாதிகள் 9 பேரை கைது செய்தனர். மேற்கு வங்கத்தில் 6 பேர், கேரளாவின் எர்ணாகுளத்தில் 3 பேர் சிக்கினர். விசாரணையில் தமி ழகத்தைச் சேர்ந்த சிலருடன் அவர்கள் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்துவதற் காக டெல்லியைச் சேர்ந்த என்ஐஏ அதி காரிகள் தமிழகம் வந்துள்ளனர். அல் காய்தா இயக்கத்தில் சேருவதற்காக தமி ழகத்தைச் சேர்ந்த சிலர் முயற்சி செய்த தாகவும், அவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அல்-காய்தா இயக்கத்தை வளர்ப்பதற் காக கேரளாவில் கைதானவர்கள் தீவிரமாக நிதி வசூல் செய்துள்ளனர். அவர்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பலர் பண உதவி செய்திருப்பதாக கூறப்படுகிறது. பண உதவி செய்தவர்கள் குறித்த விவரங் களை சேகரிக்கும் பணி நடந்து வருவதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் இணைய தள முகவரிகளை ஆய்வு செய் ததில் அல்-காய்தா இயக்கத்தை தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் வளர்ப்பதற்கு முயற்சி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த சிலர் உதவி செய்துள்ளனர். அவர்களை கண்டுபிடிக்கும் பணியில் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் அல்-காய்தா தீவிரவாதி கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. எல்லைகளில் வாகன சோத னைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்