தேமுதிக 16-ம் ஆண்டு விழா: விஜயகாந்த் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்

By செய்திப்பிரிவு

தேமுதிகவின் 16-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னை கோயம்பேட்டில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், கட்சிக் கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்கினார்.

தேமுதிக கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் இந்நாளில் கட்சியின் கொடியை ஏற்றி, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அக்கட்சியின் 16-ம் ஆண்டு தொடக்க நாள் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில், தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பங்கேற்று கட்சியின் கொடியை ஏற்றினார். பின்னர், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர்கள் எல்.கே சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதேபோல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தேமுதிக நிர்வாகிகள் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்