கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனத்துக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்குநராக இருந்த சாருமதி கடந்த ஆண்டு மே 31-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். அதன்பிறகு, அப்பதவிக்கு பூர்ணசந்திரனை நியமித்து தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி முதல்வர் கீதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘‘கல்லூரிக் கல்வி இயக்குநராக உள்ளவர் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே, அப்பதவிக்கு தகுதியானவர்களின் பட்டியலை தயாரிக்கவேண்டும். ஆனால், பூர்ணசந்திரனை நியமிப்பதற்காகவே அந்த பட்டியல் தாமதமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அவரைவிட சீனியரான என்னை நியமிக்காமல் அவரை நியமித்தது சட்டவிரோதம்’’ என்று அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், கல்லூரிக் கல்வி இயக்குநராக பூர்ணசந்திரனை நியமித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இதுதொடர்பாக தமிழக அரசு, உயர்கல்வி துறை செயலர், கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தரப்பில் வரும் 22-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்