இறுதி வாக்காளர் பட்டியல் 2021 ஜன.20-ல் வெளியாகும்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

By செய்திப்பிரிவு

இறுதி வாக்காளர் பட்டியல் 2021 ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான திருத்தப் பணிகள் ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெறும். இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நவம்பரில் தொடங்கப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழகதலைமை தேர்தல் அதிகாரிசத்யபிரத சாஹு, ‘‘ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 16-ம் தேதி வெளியிடப்படும். அன்றுமுதல், டிசம்பர் 12-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், ஆட்சேபங்களை பதிவு செய்தல்போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். பெறப்பட்ட மனுக்கள் மீது 2021 ஜனவரி 1-ம் தேதி தீர்வு காணப்படும். ஜனவரி 14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலுக்கான அனுமதியை ஆணையத்திடம் இருந்து பெற்று, ஜனவரி 15-ம்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்’’ என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 15-க்கு பதிலாக ஜனவரி 20-ம் தேதி வெளியாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

29 mins ago

கல்வி

22 mins ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

25 mins ago

ஓடிடி களம்

32 mins ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்