பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய ‘சுக்கா, மிளகா, சமூகநீதி’ நூல் செப். 17-ம் தேதி வெளியீடு

By செய்திப்பிரிவு

பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய ‘சுக்கா, மிளகா சமூகநீதி’ என்ற நூல் வரும் 17-ம் தேதி வெளியிடப்படுகிறது என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறிஇருப்பதாவது:

சமூகநீதி குறித்த வரலாற்றை மக்கள் தெரிந்து கொள்ளவும், அதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ‘சுக்கா.. மிளகா.. சமூகநீதி’ என்ற தலைப்பில் சமூகநீதி வரலாற்று நூலை பாமகநிறுவனர் ராமதாஸ் எழுதிஉள்ளார்.

தமிழக வரலாற்றில் இடம்பெறப் போகும் இந்த நூல், வன்னியர்களின் இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் நாளான செப்டம்பர் 17-ம் தேதிவெளியிடப்படும். நூல் வெளியீட்டு நிகழ்ச்சி, ராமதாஸ் முன்னிலையில் இணைய வழியில் நடக்கிறது. இந்த நூலை, பாமக அரசியல் ஆலோசனைக் குழு தலைவர் தீரன் வெளியிட, சேத்தியாத்தோப்பில் நடந்த இடஒதுக்கீட்டு போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தியாகி தட்டானோடை செல்வராஜ் பெற்றுக்கொள்வார்.

பாட்டாளிகள், சமூகநீதி குறித்த ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் இந்த நூலை வாங்கிப் படித்து சமூகநீதி வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும். சமூகநீதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த நூல், அனைவரின் வீடுகளிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய புனித நூல் ஆகும்.

இவ்வாறு ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

41 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்