பயனாளிக்கான தொகை வேறு நபரின் வங்கிக் கணக்கில் வரவு: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் முறைகேடு நடவடிக்கை கோரி முதல்வருக்கு புகார் மனு

By செய்திப்பிரிவு

பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதால், தொடர்புடைய வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பப் பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் எலந்தங்குழி ஊராட்சிக்குட்பட்ட சீரானத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சோலை முத்து. இவருக்கு, 2018-2019-ம் நிதியாண்டில் பிரதமரின் அனை வருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொள்ள அனுமதி கிடைத்தது. ரூ.2.10 லட்சம் மதிப்பில் வீடு கட்டிக்கொள்ளுமாறும், ரூ.52,500 வீதம் 4 தவணையாக பயனாளியின் பெயரில் பணம் வரவு வைக்கப்படும் எனவும் ஊராட்சி சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து, சோலைமுத்து வீட்டைக் கட்டி முடித்தார். ஆனால், வீடு கட்டியதற்காக இத்திட்டத்தில் அவரது வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை.

இதுகுறித்து சோலைமுத்துவின் பேரன் உலகநாதன் என்பவர், எலந்தங்குழி ஊராட்சி அலுவலர்களிடம் விளக்கம் கேட்டபோது, விரைவில் பணம் வரும் காத்திருங்கள் எனக் கூறி தாமதப்படுத்தி வந்துள்ளனர். இதையடுத்து உலகநாதன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு விண்ணப்பித்தார்.

அப்போது, பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்துக் கான பணம் சோலைமுத்துவின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாமல், அதே கிராமத்தைச் சேர்ந்த மாலதி செல்வம் என்பவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள் ளது என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து உலகநாதன் கூறிய தாவது: பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சீரானத்தம் கிராமத்தில் 43 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இக்கிராமத்தில் 43 வீடுகள் கட்டப்படவில்லை. ஒரு சில வீடுகள் மட்டுமே முறையாக, முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சில வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் உள்ளன. மேலும், ஒதுக்கீடு பெற்றவர் அல்லாமல் வேறு நபர்களும் வீடு கட்டியுள்ளனர்.

இந்த முறைகேட்டில், ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் சிலரும் ஈடுபட்டிருக்கலாம். நூறு நாள் வேலை திட்டத்தில் சேருவதற்காக பயனாளிகள் கொடுத்த ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு விவரம் போன்ற ஆவணங்களை ஊராட்சி அலுவலர்கள் சிலர் தவறாக பயன் படுத்தி இத்திட்டத்தில் முறைகேடு செய்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களிடம் சுமார் 40 புகார் மனுக்கள் வரை அளித்தும், ஒருவரும் முறைகேடு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு தற்போது புகார் மனு அனுப்பியுள்ளேன் எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

21 mins ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்