வணிக வரித் துறை செயலாளர் பீலா ராஜேஷின் தந்தை காலமானார்

By செய்திப்பிரிவு

வணிக வரித்துறை செயலாளர் பீலா ராஜேஷின் தந்தையும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான வெங்கடேசன் (82) நேற்று மரணம் அடைந்தார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி வெங்கடேசன் சென்னை கொட்டிவாக்கத்தில் நேற்று மரணம் அடைந்தார். இவர், 1962-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றவர். டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராணி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். இவர்களது மகள் தமிழக அரசின் வணிக வரித்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ்.

82 வயதான வெங்கடேசன் உடல் நலக் குறைபாடு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். சென்னை கொட்டிவாக்கம் கல்யாணி நகர் ராணி தெருவில் உள்ள வீட்டில் வெங்கடேசனின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அமெரிக்காவில் இருக்கும் மகன் வந்ததும் உடல் அடக்கம் நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

சினிமா

21 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

கல்வி

54 mins ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

57 mins ago

ஓடிடி களம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்