‘இது இந்தி அரசல்ல இந்திய அரசு’- ஆயுஷ் அமைச்சக செயலருக்கு கமல்ஹாசன் கண்டனம் 

By செய்திப்பிரிவு

மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான இணையவழி புத்தாக்கப் பயிற்சி முகாமில் இந்தியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டன. இதுகுறித்து தமிழக மருத்துவர்கள் இணைய வழியில் ஆட்சேபம் தெரிவித்தபோது ஆயுஷ் அமைச்சக செயலரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அனைத்து மாநில அரசுத் துறைகளிலும் பணியாற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான 3 நாட்கள் இணையவழி புத்தாக்கப் பயிற்சி முகாமை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடத்தியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மருத்துவர்கள் உள்ளிட்ட சுமார் 400 மருத்துவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர்.

இதில் அனைத்து வகுப்புகளும் இந்தி மொழியில் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. இந்தியில் வகுப்புகளை நடத்துவது தங்களுக்குப் புரியவில்லை என்பதால் ஆங்கிலத்தில் நடத்தும்படி தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆயுஷ் அமைச்சகத்துக்கு இணைய வழியில் தகவல் அனுப்பியுள்ளனர்.

மூன்றாவது நாள் வகுப்பை அமைச்சகத்தின் செயலாளர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா நடத்தியுள்ளார். அவரும் முழுக்க முழுக்க இந்தி மொழியிலேயே வகுப்பை நடத்தியுள்ளார். ஆங்கிலத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அவர் ஏற்கவில்லை.

தமக்கு சரளமாக ஆங்கில பேச வராது என்றும், அதனால் இந்தியில் மட்டும்தான் வகுப்பு நடத்த முடியும் என்றும் கூறியுள்ளார். அப்போது அவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா, தெலங்கானா,கேரள மாநில மருத்துவர்களும் இதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

இது தற்போது சர்ச்சையாகி வருகிறது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸும், திமுக எம்.பி. கனிமொழியும் கண்டனம் தெரிவித்தனர். தற்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்க வேண்டியது அரசின் கடமை எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவு:

“ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை. அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்க வேண்டியது அரசின் கடமை. இது இந்தி அரசல்ல. இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம். வாழிய பாரதமணித் திருநாடு”.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

சினிமா

21 mins ago

விளையாட்டு

27 mins ago

சினிமா

33 mins ago

தமிழகம்

54 mins ago

இந்தியா

39 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

25 mins ago

மேலும்