49 மூத்த சிவில் நீதிபதிகளுக்கு மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

49 மூத்த சிவில் நீதிபதிகளுக்கு மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அனுப்பிய பரிந்துரையை ஏற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்றங்களில் மூத்த சிவில் நீதிபதிகளாக பணியாற்றி வரும் 49 பேருக்கு மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கப்படு கிறது.

அதன்படி புதுச்சேரி மாநிலம் ஏனாம் சார்பு நீதிபதி எம்.சந்திரன், கோவை முதன்மை சார்பு நீதிபதி பி.குமார், நாகப்பட்டினம் தலைமை குற்றவியல் நடுவர் டி.பன்னீர்செல்வம், நாமக்கல் தலைமை குற்றவியல் நடுவர் ஏ.பி.லதா, நெல்லை தலைமை குற்றவியல் நடுவர் எஸ்.ரவிசங்கர், திருவள்ளூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலர் ஜி.சரஸ்வதி, சென்னை எழும்பூர் 2-வது பெருநகர குற்றவியல் நடுவர் ரோஸ்லின் துரை, திருவண்ணாமலை முதன்மை சார்பு நீதிபதி ஜி.எம்.வாசந்தி, திருச்சி முதன்மை சார்பு நீதிபதி கே.விஜயா, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் 3-வது உதவி நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமார்.

மதுரை தலைமை குற்றவியல் நடுவர் டி.வி.ஹேமந்த்குமார், தேனி தலைமை குற்றவியல் நடுவர் ஜெ.வெங்கடேசன், சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் 4-வது உதவி நீதிபதி ஏ.பாக்கிய ஜோதி, எழும்பூர் கூடுதல் பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் ஏ.எம்.ரவி.

திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் ஜி.சுந்தரராஜன், சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் 7-வது உதவி நீதிபதி பி.வித்யா உள்ளிட்ட 49 பேர் பதவி உயர்வில் மாவட்ட நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

6 mins ago

இந்தியா

9 mins ago

இந்தியா

15 mins ago

உலகம்

21 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

31 mins ago

இந்தியா

35 mins ago

உலகம்

39 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

56 mins ago

மேலும்