ஆன்லைன் வகுப்பு புரியாததால் 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை

By செய்திப்பிரிவு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் ஆன்லைன் வகுப்பு சரிவரப் புரியாததால் 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆண்டிபட்டி காமராஜர் நகரைச் சேர்ந்த தம்பதி பாண்டி, மீனா. இவர்களுக்கு வெண்ணிலா (17), அபிஷேக் (15) மற்றும் சாருகேஷ் (12) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

பாண்டி கட்டிட காண்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். இவருடைய இரண்டாவது மகனான அபிஷேக், கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவந்தார். கரோனா பரவலால் பள்ளிகள் திறக்கப்படாததால், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகளில் அபிஷேக் படித்து வந்துள்ளார். ஆனால் அவர் பாடங்கள் தனக்கு சரிவரப் புரிய வில்லை என பெற்றோரிடம் கூறி வந்துள்ளார்.

தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த அபிஷேக் நேற்று முன்தினம் விஷம் குடித்தார்.

அவரை தேனி அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆண்டிபட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

36 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்