கட்டுமான தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரண நிதி கோரி கோவில்பட்டியில் தொழிலாளர் துணை ஆய்வாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

By எஸ்.கோமதி விநாயகம்

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் சிஐடியு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

கட்டுமானம், உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் கரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

விண்ணப்பித்து பல மாதமாகியும் வழங்கப்படாத கல்வி, திருமண நிதி, ஓய்வு ஊதியம் உடனடியாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி தொழிலாளர் துணை ஆய்வாளர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார்.

சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் மோகன்தாஸ், மாவட்ட குழு உறுப்பினர் தெய்வேந்திரன், கட்டுமான சங்க நகர தலைவர் மாரியப்பன், நகர செயலாளர் அந்தோணி செல்வம், விவசாய சங்க மாவட்ட தலைவர் மணி, மாவட்ட பொருளாளர் ராமசுப்பு மற்றும் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு கரோனா மாதம் ரூ.7, 500 வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்