சென்னை அரசு பொது மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக இதுவரை வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த 40 பேர் பிளாஸ்மா தானம்

By செய்திப்பிரிவு

சென்னை அரசு பொது மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக இதுவரை வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த 40 பேர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்றுக்குதடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தடுப்பு மருந்துகள் இல்லாத நிலையில், தமிழகத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அலோபதி, சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி மருந்துகள் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சோதனை முறை வெற்றி

இதற்கிடையே சோதனை முறையில், வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து அதை கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு செலுத்தி சிகிச்சை அளிக்க தமிழகஅரசு முடிவு செய்தது. அதன்படி, சென்னை அரசு பொது மருத்துவமனையில் 26 பேருக்கு சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதில், 24 பேர் முழுவதுமாக கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தனர். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 4 பேர் குணமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, சென்னை அரசு பொது மருத்துவமனையில் ரூ.2.34 கோடியில் அமைக்கப்பட்ட பிளாஸ்மா வங்கி கடந்த மாதம் திறக்கப்பட்டது. தமிழக அரசு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மாவை தானம் செய்து வருகின்றனர். வடசென்னை பாஜக மருத்துவர் பிரிவு சார்பில் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த 12 பேர் பிளாஸ்மா தானம் செய்யமருத்துவமனைக்கு நேற்று வந்தனர். அவர்களில், மருத்துவர்களின் ஆலோசனையின்படி முழு உடல் தகுதியுடன் இருந்த 4 பேர் பிளாஸ்மாவை தானம் செய்தனர்.

இதுதொடர்பாக சென்னை அரசு பொது மருத்துவமனை ரத்த வங்கி துறைத் தலைவர் டாக்டர் எஸ்.சுபாஷ் கூறியதாவது:

57 பேர் குணமடைந்துள்ளனர்

கரோனா வைரஸ் தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனை கொடுத்துள்ளது. இதுவரை 40 பேர்பிளாஸ்மா தானம் செய்துள்ளனர்.பிளாஸ்மாவைப் பயன்படுத்தி57 பேர் குணமடைந்துள்ளனர். பலர் சிகிச்சையில் உள்ளனர். 30 நிமிடத்தில் பிளாஸ்மாவை தானம் செய்யலாம்.

ஒருவரிடம் இருந்து 500 மிலி பிளாஸ்மா பெறப்படுகிறது. ரத் தத்தில் இருந்து பிளாஸ்மா கூறு மட்டும் பிரித்து எடுக்கப்படும். மீதமுள்ள ரத்தம், தானம் கொடுத்தவரின் உடலில் செலுத்தப்படும். தானம் பெறப்பட்ட பிளாஸ்மாவை ஓராண்டு வரை சேமித்து வைத்துபயன்படுத்தலாம். ஒருவரிடம் இருந்து எடுக்கப்படும் பிளாஸ்மாவை 2 பேருக்கு கொடுக்கலாம்.

பிளாஸ்மா தானம் என்பது ரத்ததானம் போல் இல்லை. ஒருவரின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்து எடுப்பதற்கு ரூ.10ஆயிரம் செலவாகும். இந்த செலவை தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது. வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த 14 நாட்களுக்கு பிறகு பிளாஸ்மா தானம் செய்யலாம்.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய நோய், உடல்உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைமேற்கொண்டவர்கள், சிறுநீரகநோய், புற்றுநோய் போன்ற பிறநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க முடியாது.

ஒரு முறை பிளாஸ்மா தானம் செய்தவர் 14 நாட்கள் கழித்து மீண்டும் தானம் செய்யலாம். அதனால் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன் வரவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

50 mins ago

ஜோதிடம்

53 mins ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்