கரோனாவால் தட்டச்சுப் பள்ளிகளுக்கு இப்போது அனுமதியில்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

By கி.மகாராஜன்

கரோனா பரவி வருவதால் தட்டச்சுப் பள்ளிகளைத் திறக்கத் தற்போது அனுமதி வழங்க முடியாது என அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக தட்டச்சு, கணினி பயிற்சிப்பள்ளி சங்க மாநிலத் தலைவர் செந்தில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''கரோனா தொற்று காரணமாக மார்ச் 25 முதல் அனைத்து தட்டச்சு, கணினிப் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டன. இத்தொழிலில் சுமார் பத்தாயிரம் குடும்பங்கள் உள்ளன. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் தட்டச்சு, கம்ப்யூட்டர் பயிற்சிப் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.

தட்டச்சு பயிற்சி மையங்களில் மாணவர்கள் குறைந்த நேரமே பயிற்சி பெறுகின்றனர். ஒரு முறைக்கு 10 முதல் 15 மாணவர்கள் மட்டுமே வருகின்றனர். பலர் கடன் வாங்கி பயிற்சிப் பள்ளி நடத்தி வருகின்றனர். பள்ளிகளைத் திறக்காததால் கடனைக் கட்ட முடியாமல் வாழ்வாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பயிற்சி மையங்களைத் திறக்க அனுமதித்தால் கிருமிநாசினி பயன்படுத்துவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட அனைத்து நிபந்தனைகளையும் கண்டிப்பாகப் பின்பற்றுவோம் என உறுதியளிக்கிறோம். எனவே தமிழகத்தில் தட்டச்சு, கணினி பயிற்சிப் பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், ''தமிழகத்தில் 2000-க்கும் அதிக தட்டச்சு பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. கரோனா பரவி வரும் சூழலில் தற்போது தட்டச்சு பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்க முடியாது'’எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், ''டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இதனால் தட்டச்சு பள்ளிகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் ''எனக் கூறப்பட்டது.

இதையடுத்துத் தமிழகத் தலைமைச் செயலர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்