கல்பாக்கம் நகரில் ஆம்புலன்ஸ்களுக்கு அனுமதி மறுப்பு

By செய்திப்பிரிவு

சதுரங்கப்பட்டினத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வந்த ஆம்புலன்ஸ்களை கல்பாக்கம் நகரியப்பகுதி சாலை வழியாக செல்ல சிஐஎஸ்எஃப் வீரர்கள் அனுமதிக்க மறுத்து, திருப்பி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருக்கும் நகரியப்பகுதியின் பாதுகாப்புப் பணிகளை மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், நகரியப் பகுதியில் கரோனா தொற்று பரவல்அதிகரித்ததால், நகரியப பகுதியின் பிரதான சாலை தவிர்த்து அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டன.

மேலும், பிரதான சாலையில் அணுமின் நிலைய ஊழியர் பணி வாகனத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு, மற்ற போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று சதுரங்கப்பட்டினம் பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நகரியப்பகுதியின் பிரதான சாலை வழியே செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்களை அனுமதிக்க முடியாது எனக்கூறி சிஐஎஸ்எஃப் வீரர்கள் திருப்பி அனுப்பினர்.

இதுகுறித்து, மத்திய பொதுப்பணித் துறை நிர்வாக இயக்குநர் மனோகரனிடம் கேட்டபோது, “நகரிய பிரதான சாலையில் ஆம்புலன்ஸ் வாகனங்களை அனுமதிக்காதது ஏன் என தெரியவில்லை. சிஐஎஸ்எஃப் கமாண்டென்ட் மற்றும் துணை கமாண்டென்ட் அதிகாரிகளிடம் மீண்டும் இதுமாதிரியான செயல்கள் நடைபெறக்கூடாது என்று தெரிவித்துள்ளோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

9 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்