சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க ஐடி பிரிவை வலுப்படுத்தும் அதிமுக: 80 ஆயிரம் நிர்வாகிகளை நியமிக்க நடவடிக்கை

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க 80 ஆயிரம் நிர்வாகிகளை நியமித்து தகவல் தொழில்நுட்ப பிரிவை (ஐடி) வலுப்படுத்தும் நடவடிக்கையில் அதிமுக தலைமை இறங்கியுள்ளது. குறிப்பாக, முதல்முறையாக ஐடி பிரிவில் மாவட்ட நிர்வாகிகளை சென்னை மண்டலம் ஆன்லைனில் தேர்வு மூலம் தேர்வு செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கிவிடும். இதை கருத்தில் கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளும் அடிப்படை பணிகளை தொடங்கி விட்டன. அதிமுகவை பொறுத்த வரை, நிர்வாக ரீதியிலான 55 மாவட் டங்களில் பல மாவட்டங்களை பிரித்து 67 மாவட்டங்களாக எண்ணிக்கையை உயர்த்தியது.

முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள் என கட்சியில் பதவி இல்லாமல் இருந்த வர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டன.

இதுதவிர மேலும், விருதுநகர், புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களை பிரிக்கவும் அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது.

தேர்தலுக்கு முன்பு கட்சியின் நிர்வாகரீதியிலான அமைப்பை வலுப்படுத்தும் பணிகளுக்கு இடையில், கரோனா காலத்திலும் மக்களை எளிதில் அணுகும் தொழில்நுட்ப பிரிவையும் அதிமுக சீரமைத்துள்ளது.

இதற்காக மாநில அளவிலான தகவல் தொழில்நுட்ப நிர்வாக கட்டமைப்பு கலைக்கப்பட்டு, சென்னை, கோவை, மதுரை உட்பட 5 மண்டலங்கள் பிரிக் கப்பட்டு அவற்றுக்கு மண்டல செயலாளர்களும் நியமிக்கப்பட் டுள்ளனர். கரோனா ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும் என தெரியாததால், ஐடி பிரிவை வலுப் படுத்தி, அதன் மூலம் அரசின் திட்டங்கள், பணிகளை பொது மக்கள் மத்தியில் சேர்க்க திட்ட மிட்டுள்ளது.

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி களுக்கு இதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் நிலையில், அதிமுக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள நினைக் கிறது. எனவே, ஐடி பிரிவுக்கு மாவட்ட, வட்டம், ஒன்றிய அளவில் தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் நிர்வாகிகளை நியமிக்கிறது.

6 ஆயிரம் விண்ணப்பங்கள்

அதிலும் முதல்முறையாக ஆன்லைன் தேர்வு நடத்தி அதன் மூலம் நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் சென்னை மண்டல ஐடி பிரிவு இறங்கியுள்ளது. இது குறித்து, சென்னை மண்டல செயலாளர் அஸ்பயர் கே.சுவாமி நாதன் கூறியதாவது:

சென்னையை பொறுத்தவரை மாவட்டம், பகுதி அளவில் மட்டும் நிர்வாக காலியிடங்கள் உள்ளன. இதற்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஐடி பிரிவுக்கு தேவையான திறன் கொண்டவர்கள், கட்சி, தலை மைக்கு விசுவாசம் உடையவர் களை நியமிக்க தலைமை உத்தர விட்டுள்ளது.

இதன் அடிப்படையில், கல்வித் தகுதி, அனுபவம், கட்சிக்காக பணி யாற்றியது என்ற அடிப்படையில் முதலில் பிரிக்கப்படுகின்றனர். அடுத்ததாக, இந்தியாவில் முதல் முறையாக, பி-சாட் அதாவது அரசியல் மற்றும் சமூகவலைதள விழிப்புணர்வு திறனறி தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படு கிறது. 500-க்கும் மேற்பட்ட கொள் குறி வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப் பட்டவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தி பட்டியல் தலைமைக்கு அனுப்பப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 mins ago

வணிகம்

24 mins ago

சினிமா

46 mins ago

இந்தியா

18 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்