பாஜகவில் இருந்து விலக திட்டமா?- நயினார் நாகேந்திரன் விளக்கம்

By செய்திப்பிரிவு

அதிமுக முன்னாள் அமைச்சரான நயினார் நாகேந்திரன் 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜகவில் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதால் மாநிலத்தலைவர் பதவி தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், எல்.முருகன் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர், மாநிலப் பொதுச் செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்த அதிருப்தியில் இருந்த நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவில் இணையுமாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,‘‘கட்சித் தலைமையின் கொள்கையையும், உழைப்பை அங்கீகரிக்கும் மாண்பையும் அறியாத அவசரக்குடுக்கைகளைக் கண்டு பாஜககாரனுக்கும் ஏற்படும் நியாயமான கோபமும், வருத்தமும் எனக்கும் உண்டு. என் கோபம் பாஜகவைவிட்டு செல்பவர்களுக்கு எதிரானது’’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்