அரசின் அதிமுக்கிய வழக்குகளில் ஏ.எல்.சோமயாஜி ஆஜராவார்: சிறப்பு மூத்த வழக்கறிஞராக நியமனம்

By செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவரும் அதிமுக்கியமான வழக்குகளில் தமிழக அரசுக்காகஆஜராக அரசு சிறப்பு மூத்த வழக்கறிஞராக ஏ.எல்.சோமயாஜியை அரசு நியமித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசுக்காக வாதிட அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தலைமையில் ஏற்கெனவே 9 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் உள்ளனர். இதுதவிர மாநில தலைமை குற்றவியல்வழக்கறிஞராக ஏ.நடராஜனும், அரசு ப்ளீடராக வி.ஜெயப்பிரகாஷ் நாராயணனும் உள்ளனர்.

இந்நிலையில் அதிமுக்கியமான மற்றும் சிக்கலான வழக்குகளில் தமிழக அரசுக்காக ஆஜராகி வாதிட ‘அரசு சிறப்பு மூத்த வழக்கறிஞர்’ என்ற தற்காலிக புதிய பதவியிடத்தை உருவாக்கி, அந்த இடத்தில் ஏற்கெனவே தமிழக அரசின்தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த ஏ.எல்.சோமயாஜியை அரசு தற்போது நியமித்துள்ளது.

இவருக்கு மாத ஊதியமாக ரூ.75 ஆயிரம் வழங்கப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கானஉத்தரவை ஆளுநரின் ஒப்புதலின்பேரில் தமிழக அரசின் பொதுத்துறை முதன்மை செயலாளர்பிறப்பித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

இந்தியா

7 mins ago

இந்தியா

29 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்