இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை பாஜக ஆதரிக்காது: கார்த்திசிதம்பரம் எம்.பி 

By இ.ஜெகநாதன்

‘‘இதர பிற்படுத்தபட்டோருக்கு இடஒதுக்கீட்டை பாஜக ஆதரிக்காது. அது உயர்சாதிக்கான கட்சி,’’ என, சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

கார்த்திசிதம்பரம் எம்பி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார். ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குநர் அருண்மணி, அரசு மருத்துவக் கல்லுாரி டீன் ரத்தினவேல், நிலைய மருத்துவ அலுவலர் மீனாள், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனா் இளங்கோமகேஸ்வரன், சுகாதார துணை இயக்குநர் யசோதாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கார்த்திசிதம்பரம் எம்பி பேசியதாவது: கரோனாவால் பாதிக்கபட்டோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். மேலும் நோய் தாக்குதலால் இறந்தோரின் உடலை அடக்கம் செய்யும்போது மதசடங்குகளை பின்பற்ற உதவிட வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிவதை கட்டாயப்படுத்த வேண்டும், என்று கூறினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை பாஜக ஆதரிக்காது. அது உயர்சாதிக்கான கட்சி. ராணுவவீரரின் மனைவி, தாயாரை கொன்று கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளிகளை தமிழக காவல்துறையினர் விரைவில் பிடிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவது தேவையற்றது, என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

24 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்