ரயில்வேயை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து கோவில்பட்டியில் எஸ்.ஆர்.எம்.யு. ஆர்ப்பாட்டம்

By எஸ்.கோமதி விநாயகம்

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து கோவில்பட்டியில் எஸ்.ஆர்.எம்.யூ (சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்தியா முழுவதும் 109 வழித்தடங்களில் லாபகரமாக இயங்கும் 151 பயணிகள் விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது.

சரக்குப் போக்குவரத்தையும், வருவாயையும் இருமடங்கு உயர்த்தப் போவதாக போலி காரணத்தைக் கூறி ரயில்வே சரக்கு போக்குவரத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாத 50 சதவீத காலியிடங்களை சரண்டர் செய்யக்கூடாது. காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவில்பட்டி ரயில்வே நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.ஆர்.எம்.யு. கிளைச் செயலாளர் மைக்கேல்ராஜ் தலைமை வகித்தார். செண்பகராஜ் முன்னிலை வகித்தார்.

கோவில்பட்டி நிலைய அதிகாரி சுடலைமணி, சுந்தரவேல்குமார் ஆகியோர் பேசினர். இதில், திரளானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

12 mins ago

இந்தியா

17 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

25 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

31 mins ago

ஆன்மிகம்

41 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

மேலும்