டெல்லி தப்லீக் மாநாட்டில் பங்கேற்றதாக கைதான 129 வெளிநாட்டினர் ஹஜ் சொசைட்டிக்கு மாற்றம்: உயர் நீதிமன்றத்தி்ல் தமிழக அரசு தகவல்

By செய்திப்பிரிவு

தப்லீக் மாநாட்டில் பங்கேற்றதாக கைதான 129 வெளிநாட்டினர் ஹஜ் சொசைட்டிக்கு மாற்றப் படுவார்கள் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித் துள்ளது.

டெல்லி தப்லீக் மாநாட்டில் பங்கேற்று மதப் பிரச்சாரத்தி்ல் ஈடுபட்ட 129 வெளிநாட்டினர் மூலம் கரோனா வைரஸ் பரவியதாக, அவர்களை தமிழக போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியபிறகும், அவர்களை விடுவிக்காமல் சிறைக்குள்ளேயே சிறப்பு முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டி சையது கலீஷா, ஈசுப்இம்ரான் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கானும், அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜனும் ஆஜராகி வாதிட்டனர்.

விசாரணை முடியும் வரை...

அப்போது அரசு தரப்பில், இவர்கள் மீது இதுவரை 14 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அயல்நாட்டினருக்கான சட்டப் பிரிவுகளில் அவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதால் வழக்குவிசாரணை முடியும்வரை சொந்தநாட்டுக்கு அனுப்ப முடியாது என்பதால் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும், 3 நாட்களில் சென்னையில் உள்ளஹஜ் சொசைட்டிக்கு மாற்றப்படஉள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக அரசுதரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவி்ட்டு, விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

ஓடிடி களம்

16 mins ago

விளையாட்டு

31 mins ago

சினிமா

33 mins ago

உலகம்

47 mins ago

விளையாட்டு

54 mins ago

ஜோதிடம்

36 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்