ஊரடங்கால் இலங்கையில் தவித்த 150 இந்தியர்கள் தாயகம்  திரும்பினர்

By எஸ்.முஹம்மது ராஃபி

ஊரடங்கால் இலங்கையில் சிக்கியிருந்த 150 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு ஏர் இந்தியா விமானம் இன்று தாயகம் திரும்பியது.

கரோனா ஊரடங்கினால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக மத்தய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக இந்தியர்களை விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக இந்திய அரசால் “வந்தே பாரத்” திட்டமும், கப்பல் மூலம் அழைத்து வருவதற்கு சமுத்திரசேது என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முதற்கட்டமாக இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்கள் 176 பேரை ஏற்றிக் கொண்டு ஏர் இந்தியா விமானம் கடந்த மே 29 அன்று கொழும்பிலிருந்து மும்பை, புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு வந்தடைந்தது.

இரண்டாம் கட்டமாக ஜீன் 2 அன்று இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து 713 இந்தியர்களுடன் இந்திய கடற்படை கப்பல் 'ஐஎன்எஸ் ஜலஸ்வா' தூத்துக்குடி வஉசி துறைமுகம் வந்து சேர்ந்தது.

தொடர்ந்து சென்னை, பெங்களூரு மற்றும் டெல்லிக்கும் கொழும்பிபிலிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களும் வந்தடைந்தனர்.

இந்நிலையில் இலங்கையில் சிக்கியிருந்த இந்தியர்கள் 150 பேரை ஏற்றிக் கொண்டு ஏர் இந்தியா விமானம் கொழும்பிலிருந்து புதன்கிழமை காலை டெல்லிக்கு புறப்பட்டது.

இதுவரையிலும் இலங்கையில் சிக்கியிருந்த சுமார் 2,000 இந்தியர்கள் விமானங்கள் மற்றும் ஐஎன்எஸ் ஜலஸ்வா'கப்பல் மூலமாக தாயகம் திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

10 mins ago

ஆன்மிகம்

20 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்