சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக தென்னை, பனை மர கழிவுகளிலிருந்து விநாயகரை உருவாக்கும் மாணவர்கள்

By செ.ஞானபிரகாஷ்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக தென்னை, பனை மர கழிவுகளி லிருந்து விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகின்றனர் புதுச்சேரி கிராமப் பகுதியிலுள்ள சேலியமேடு வாணிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்.

தென்னை, பனை மரங்களிலிருந்து விழுந்து குப்பையில் சேரும் பொருட்களை கலைப் படைப்புகளாக மாற்றுவதில் வல்லமை படைத்தவர்கள் புதுச்சேரி சேலியமேடு வாணிதாசன் அரசு பள்ளி மாணவர்கள். நுண்கலை ஆசிரியரான உமாபதி வழிகாட்டுதல் படி பல கண்காட்சிகளில் மாண வர்கள் பங்கேற்றனர். அத்துடன் திருச்சி, சென்னை, புதுச்சேரி என பல நகரங்களில் தனியார் கல்லூரிகளில் கலை வகுப்புகளும் எடுக்கின்றனர்.

தற்போது விநாயகர் சதுர்த்தியை யொட்டி தென்னை, பனை மரங்களில் இருந்து விழும் தென்னை குருத்து, பனை ஓலை என சாதாரண பொருட்களில் இருந்து கலைநயமிக்க விநாயகர் சிலைகளை முதல்முறையாக செய்ய தொடங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக ஆசிரியர் உமாபதி 'தி இந்து'விடம் கூறிய தாவது:

விநாயகர் சதுர்த்தியையொட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை மையப்படுத்தி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத விநாயகர் வடிவங் களை 8,9ம் வகுப்பு மாணவர்கள் உருவாக்குகின்றனர். மாணவ, மாணவிகளான தமிழ்செல்வன், சீனிவாசன், ராகேஷ், கவுதம், பாலசந்தர், ஜோக்கியா, தீபன்ராஜ் ஆகியோர் ஏராளமான விநாயகரை வடிவமைத்துள்ளனர்.

சுற்றுச்சூழலுக்கு உகந்ததுடன் செயற்கை வண்ணங்கள் ஏதும் சேர்க்கவில்லை. மாணவர்கள் கற்பனை திறனுடன் கூடிய வகையில் விநாயகரை வடிவமைத் துள்ளனர். குறிப்பாக ரோபா விநாயகர், மத்தளம் தட்டும் விநாயகர், படுத்தநிலையிலுள்ள விநாயகர் என பல புது வடிவங்களில் விநாயகரை வடிவமைத்துள்ளனர்.

விநாயகரின் தும்பிக்கை, தந்தம் ஆகிய அனைத்தும் தென்னை, பனை மரங்களில் இருந்து கீழே விழுந்த பொருட்களை கொண்டே வடிவமைத்துள்ளனர். அதிகளவாக 4 அடி உயரம் வரை விநாயகரை வடிவமைத்துள்ளனர். எங்கள் குழந்தைகள் உருவாக்கி யதுதான் முழுக்க முழுக்க இயற்கை விநாயகர் என்கிறார் பெருமிதத்துடன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

15 mins ago

உலகம்

6 mins ago

தமிழகம்

16 mins ago

இந்தியா

30 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்