திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக 1,175 படுக்கைகள் தயார்: சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக 1,175 படுக்கைகள் உள்ளன என, சுகாதாரத் துறைஅமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா தடுப்பு சிறப்பு வார்டை தமிழக சுகாதாரத் துறைஅமைச்சர் விஜயபாஸ்கர் நேற்றுஆய்வு செய்தார். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று கரோனா தடுப்பு பணிகளை மேலும் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது அமைச்சர் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 2,895 பேர்(நேற்று முன்தினம் வரை) குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1,175 படுக்கை வசதிகள் உள்ளன.310 படுக்கைகள் முழுமையாக ஆக்சிஜன் வசதியுடன் தயாராகஉள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 3,000படுக்கை வசதிகள் தனியார்மருத்துவக் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 40 பேருக்குபிளாஸ்மா சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மட்டும் 20 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்யப்பட்டு, 18 பேர் குணமடைந்துள்ளனர். இதை மத்திய அரசு பாராட்டியுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போது, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, வருவாய் அலுவலர் முத்துசாமி, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி வத்சவ், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகளுக்கான இணை இயக்குநர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

39 mins ago

ஜோதிடம்

54 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்