குமரியில் கரோனா தொற்றை சமாளிக்க ஏற்பாடு: பள்ளி, கல்லூரிகள் மருத்துவமனைகளாக மாற்றம்- 2000 படுக்கைகள் தயார்

By எல்.மோகன்

குமரி மாவட்டத்தில் கரோனா தொற்று எற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மாவட்டம் முழுவதும் கூடுதலாக 2000 படுக்கை வசதிகளுக்காக பள்ளி கல்லூரிகளை மருத்துவமனைகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பணிகளை தனி சிறப்பு அதிகாரி ஜோதி நிர்மலா ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 245 பேர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குமரி மாவட்டம் முழுவதும் கூடுதலாக 2000 படுக்கை வசதிகள் தயார் படுத்தும் பணிகள் தீவிரமக நடைபெற்று வருகிறது. அதற்காக மாவட்டம் முழுவதும் 7 இடங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளை மருத்துவமனைகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்தப் பணிகளை மாவட்ட தனி சிறப்பு அதிகாரி ஜோதி நிர்மலா ஆய்வு செய்தார். முதற்கட்டமாக நாகர்கோவிலில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, இந்துக்கல்லூரியில் அமைக்கபட்டு வரும் படுக்கை வசதிகளை அவர் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே உடனிருந்தனர்.

நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் கரோனா சிறப்பு சிகிச்சை, மற்றும் படுக்கை வசதிகள் அமைக்கப்படுவதை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்த மாவட்ட சிறப்பு அதிகாரி ஜோதி நிர்மலா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

43 mins ago

ஜோதிடம்

48 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஓடிடி களம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்