திமுக பிரமுகரின் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 43 பேருக்கு முன்ஜாமீன்

By செய்திப்பிரிவு

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட திமுக பிரமுகருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 43 பேருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சமூக வலைதளங்களில் விமர்சித்து அவதூறு பரப்பியதாக திமுக பிரமுகர் முருகன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். இதைக்கண்டித்து கோவை திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றியச் செயலாளர் துரை உள்ளிட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சீனிவாசன், தேவேந்திரன், சண்முகப்பிரியா உள்ளிட்ட 43 பேர் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும், அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜனும் ஆஜராகி வாதிட்டனர். அதையடுத்து நீதிபதி, 43 பேரும் தலா ரூ. 10 ஆயிரத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்