ஓமியோபதி, ஆயுர்வேதா அடங்கிய ‘ப்ரோபைலக்டிக்’ மருந்தை வீடுதோறும் வழங்க வேண்டும்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஓமியோபதி, ஆயுர்வேதா அடங்கிய ‘ப்ரோபைலக்டிக்’ மருந்தை தமிழகம் முழுவதும் வீடுதோறும் வழங்க வேண்டுமென தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகியமாவட்டங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மதுரை மாவட்டத்திலும் ஊரடங்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு என்பது மட்டும் தீர்வாகாது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைத்து வியூகங்களையும் அமைத்து வீடுவீடாகச் சென்று பல்வேறு முயற்சிகள் எடுப்பதைப் போன்று, தற்போது கரோனா தொற்றைத் தடுக்க, தமிழக அரசு வீடுவீடாக சென்று பரிசோதனை நடத்த வேண்டும்.

மேலும் ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்றவற்றால் பரிந்துரைக்கப்பட்ட கபசுர குடிநீர் உள்ளிட்ட ‘ப்ரோபைலக்டிக்’ மருந்துகள் அடங்கிய தொகுப்பை தமிழகம் முழுவதும் வீடுவீடாகச் சென்று வழங்க வேண்டும். முதல்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில்இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இத்திட்டம் பலனளித்தால், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்