கடலோர காவல் படை சார்பில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையை 3,000 பேர் சுத்தம் செய்தனர்

By செய்திப்பிரிவு

சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையை கடலோர காவல் படையினர், மாணவர்கள் உட்பட 3 ஆயிரம் பேர் இணைந்து நேற்று சுத்தப்படுத்தினர்.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தின் 3-வது சனிக்கிழமை சர்வதேச கடலோர தூய்மை தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்தியக் கடலோர காவல் படை சார்பில் சென்னை மெரினா கடற்கரையை தூய்மைப் படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதை சென்னை மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். கடலோர காவல் படையின் கிழக்குப் பிராந்திய ஐ.ஜி.யான எஸ்.பி.சர்மா தலைமை வகித்தார்.

கடலோர காவல் படை வீரர்கள், அவர்களது குடும்பத்தினர், மாணவர்கள், தன்னார்வத் தொண் டர்கள் உட்பட 3 ஆயிரம் பேர் கலந்துகொண்டு மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரையை சுத்தம் செய்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர்கள், ‘‘உலகிலேயே 2-வது மிகப்பெரிய கடற்கரை என்ற பெயர் பெற்றது சென்னை மெரினா. இதை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத் துழைப்பு தரவேண்டும்.

இதன் மூலம், சென்னை மக்கள், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் என அனைவரும் கடல் அழகைக் கண்டு ரசிக்க முடியும்’’ என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்