சொத்துகளை ஏமாற்றிய மகன்; ஜீவனத்துக்கு வழியின்றித் தவிக்கும் வயதான தம்பதியர்; நீதி கோரி திருப்பூர் ஆட்சியரிடம் மனு

By இரா.கார்த்திகேயன்

சொத்துகளை மகன் ஏமாற்றிப் பறித்துக் கொண்டதால், ஜீவனம் நடத்த வழி இல்லாமல் தவித்து வரும் எங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என, திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வயதான தம்பதியர் இன்று மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ராயர்பாளையத்தைச் சேர்ந்தவர் சென்னியப்பன் (85). இவரது மனைவி கருணையம்மாள் (70). தம்பதியருக்கு, பழனிச்சாமி என்ற மகனும், கண்ணம்மாள் என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து, தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னியப்பன் - கருணையம்மாள் இன்று (ஜூன் 19) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

"எனது மகன் பழனிச்சாமி, பல்லடம் நாரணபுரம் பகுதியில் உள்ள எங்களுக்குச் சொந்தமான 2.33 ஏக்கர் சொத்துகளை ஏமாற்றிப் பறித்ததுடன், எங்கள் இருவரையும் கொடுமைப்படுத்தினார். இது தொடர்பாக பல்லடம் போலீஸாரிடம் புகார் அளித்தோம். ஆனால், நடவடிக்கை இல்லை. அதேபோல், ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

உடல் உபாதையால் கடுமையாக அவதியடைந்து வருகிறோம். வாழ வழி இல்லாமல், ஜீவனத்துக்கு வழியின்றித் தவித்து வருகிறோம். எங்கள் மகன் எங்களுக்குப் பண உதவி செய்வதில்லை. எனவே, எங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். இல்லையெனில் எங்களை கருணைக் கொலை செய்ய வேண்டும்".

இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

49 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்