தொழில்துறை வளர்ச்சி பட்டியலில் திரைத்துறைக்கு சலுகை இல்லை: மத்திய அரசு மீது ஃபெப்சி அதிருப்தி

By செய்திப்பிரிவு

மத்திய அரசு அறிவித்துள்ள தொழில்‌துறை வளர்ச்சிக்கான அறிவிப்பில் திரைத்‌ துறைக்குஎந்தவிதமான சலுகைகளோ, நலத்திட்டத்துக்கான அறிவிப்போ‌ இல்லை என ஃபெப்சி அமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா வைரஸ் பாதிப்பால் திரைப்படத் துறையும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. வேலை முடக்கத்தால்‌ பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள்‌ பயன்படும்‌ வகையில்‌ முதல்கட்ட மற்றும் இறுதி கட்டப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்தமுதல்வர் மற்றும் அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

மத்திய அரசு சார்பில் தொழில்‌ துறையாக அறிவிக்கப்பட்டுள்ள திரைப்படத்‌ துறைக்கு, துறையின்‌ பாதுகாப்பற்ற தன்மை கருதி தொழில்துறைக்கு வழங்கப்படுகின்ற எந்த சலுகைகளுமே திரைப்படத் துறைக்கு வழங்குவதில்லை என்பதை வருத்தத்துடன்‌ தெரிவிக்கிறோம்‌

மேலும் ரூ.20 லட்ச கோடிஉதவி திட்டங்களை அறிவிக்கப்பட்டதில்‌ திரைப்படத்‌ துறைக்குஎந்த சலுகைகளோ அறிவிப்புகளோ‌ இல்லை. திரைத்துறை மறுபடியும்‌ உயிர்பிப்பதற்கான உதவிகளை செய்யுமாறு மத்திய அரசைக் கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

சின்னத்திரை படப்பிடிப்பில் குறைந்த பட்சம்‌ 60 பேர் தேவை. எனவே தொழிற்சாலைகளுக்கு வழங்கியதுபோல்‌ 50 சதவீததொழிலாளர்களுடன்‌ சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்க அனுமதிக்க வேண்டும்‌.இவ்வாறு ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

19 mins ago

ஜோதிடம்

23 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்