நண்பர்கள், செல்வந்தர் உதவியுடன் ஏழைகளுக்கு உணவளிக்கும் மாற்றுத் திறனாளி இளைஞர்

By செய்திப்பிரிவு

பெரம்பலூரைச் சேர்ந்தவர் உதிரம் நாகராஜ் (32). பிறவியிலேயே மாற்றுத் திறனாளியான இவருக்கு ஒரு கையும், காலும் சரிவர செயல்படாது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் மாதம் ரூ.3 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் துப்புரவுத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி, கவுள்பாளையத்தில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார்.

நாகராஜ், ‘உதிரம்’ எனும் அமைப்பை தொடங்கி கடந்த 3 ஆண்டுகளாக ரத்த தான ஆர்வலர்களை ஒருங்கிணைத்து திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை ரத்த வங்கிகளுக்கு ஆயிரம் யூனிட்டுக்கும் அதிகமாக ரத்தம் சேகரித்து வழங்கியுள்ளார்.

இந்நிலையில், ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் பலர் ஒருவேளை உணவுக்குகூட வழியில்லாமல் கஷ்டப்படுவதைக் கண்டு அவர்களுக்கு உணவு அளிக்க முடிவு செய்து நண்பர்கள், செல்வந்தர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை நாகராஜ் அணுகினார். இவர்களின் உதவியுடன் உணவு சமைத்து, பாதிக்கப்பட்டவர்களின் இருப்பிடத்துக்கே சென்று உணவு மற்றும் குடிநீர் பாட்டில் ஆகியவற்றை வழங்கி வருகிறார்.

இதுகுறித்து நாகராஜ், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘ஊரடங்கால் பிழைப்புக்கு வழியின்றித் தவிக்கும் ஏழை மக்களுக்கு உதவ தீர்மானித்து நண்பர்கள், செல்வந்தர்கள், சேவை அமைப்புகளை அணுகினேன். அவர்களின் உதவியுடன் கடந்த 55 நாட்களாக தினமும் 100 முதல் 120 பேருக்கு உணவளித்து வருகிறேன். ஒரு நாளைக்கு ரூ.2 ஆயிரம் செலவாகிறது. இதுதவிர, 60 குடும்பங்களுக்கு ஒரு வாரத்துக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்களை சேகரித்து வழங்கினோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்