ராமநாதபுரம் திருப்புல்லாணி கடற்ரையில் இறந்து கரை ஒதுங்கிய கடற்பசு

By கி.தனபாலன்

திருப்புல்லாணி அருகே சேதுக்கரையில் இறந்த நிலையில் கடற்பசு கரை ஒதுங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகேயுள்ள சேதுக்கரை கடற்கரையில் அரிய வகை கடல்வாழ் உயிரினமான ஆவுலியா எனப்படும் கடற்பசு இன்று இறந்தநிலையில் கரை ஒதுங்கியது.

அங்கிருந்த மீனவர்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து கீழக்கரை வனச்சரகர் சிக்கந்தர் பாட்சா தலைமையிலான வனத்துறையினர் இறந்த கடல் பசுவை மீட்டனர்.

பின்னர் திருப்புல்லாணி அரசு கால்நடை மருத்துவர் ஜெயபிரகாஷ் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்து கடற்கரையோரமாக புதைத்தனர்.

கரை ஒதுங்கியது இரண்டரை வயது மதிக்கத்தக்க பெண் கடற்பசு என்றும், அதன் நீளம் 2.25 மீட்டர், அகலம் 1.65 மீட்டர் எடை சுமார் 300 கிலோ இருக்கும் எனவும், எதாவது படகில் தலை மோதியதால் மயங்கி உயிர் இழந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

கடற்பசுக்கள் உலகில் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் அதிகளவில் வாழ்கின்றன. இதற்கடுத்து இந்தியாவில் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், குஜராத்தின் கட்ச் வளைகுடாவில் குறைந்தளவிலும் உள்ளன.

உலகில் கிழக்கு ஆப்பிரிக்க கடற்கரை, தெற்காசிய நாடுகள், வடக்கு ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் கடற்பகுதியில் குறைந்தளவில் உள்ளன.

கடற்பசுவை மாமிசத்திற்காகவும், தோல் மற்றும் கொழுப்பு பொருட்களுக்காகவும் வேட்டையாடப்படுகிறது. மீனவர்களின் வலைகளில் சிக்கியும், விசைப்படகுகளில் மோதியும் இவை இறப்பது தொடர்கிறது.

கடற்பசு 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு குட்டி மட்டுமே ஈணும். இனப்பெருக்கம் குறைவால் உலகளவில் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடற்பசுவை வேட்டையாட தடைவிதித்துள்ளன.

கடல் பாலூட்டி வகையைச் சேர்ந்த இதன் விலங்கியல் பெயர் ‘டுகாங் டுகான்’. கடற்பசு அல்லது ஆவுலியா என மீனவர்கள் அழைக்கின்றனர். கடற்புற்களை மட்டுமே உண்டு வாழும் தாவர உண்ணி வகையைச் சார்ந்தது.

பிறந்து 10 ஆண்டுகளில் இனப்பெருக்கத்திற்கு வரும். மிகவும் குறைவான வேகத்தில் கடலில் மிதந்து செல்லும் உயிரினம் ஆகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

42 mins ago

விளையாட்டு

33 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்