50 சதவீத பணியாளர்களுடன் தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் இயங்கின: முகக்கவசம் அணிந்து பணியாற்ற அதிகாரிகள் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

ஊரடங்கு தளர்வு அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் 50 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் நேற்றுமுதல் இயங்கத் தொடங்கின.

தமிழகத்தில் 4-ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையும் அலுவல் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள அலுவலர்கள் இரண்டாகபிரிக்கப்பட்டு, ஒரு பிரிவினர்முதல் 2 நாட்கள், அடுத்த பிரிவினர் 2 நாட்கள் என பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி, முதல் நாளான நேற்றுசென்னை உட்பட தமிழகம் முழுவதும், அரசு ஊழியர்களுக்காகபோதிய அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் மட்டும்30-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தேவையான வழித்தடங்களில் இயக்கப்பட்டன. இதுதவிர, தனியார் வேன்களும் அரசு அலுவலர்களுக்காக அனுமதி பெற்று இயங்கின.

தலைமைச் செயலகத்தை பொறுத்தவரை ஏற்கெனவே 30 சதவீதத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், நேற்று 50 சதவீதம் பேர் பணிக்கு வந்திருந்தனர். குரூப் ஏமற்றும் உயர் அதிகாரிகள் அனைவரும் பணிக்கு வந்திருந்தனர்.

தலைமைச் செயலகத்தின் 6-ம் எண் நுழைவு வாயில் பகுதியில் அதிகளவில் அலுவலர்கள் வருவார்கள் என்பதால் அங்கு அலுவலர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி வழங்கப்பட்டது. அதேபோல் நாமக்கல் கவிஞர் மாளிகையிலும் குறிப்பிட்ட வாயில்கள் மட்டும்திறக்கப்பட்டு அங்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பல்வேறு அலுவலகங்களின் உள்ளேயும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அனைத்து ஊழியர்களும் போதிய சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்றவற்றை தவறாமல் கடைபிடிக்க சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் அடிக்கடி அறிவுறுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்