ஊரடங்கு கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

By எஸ்.கோமதி விநாயகம்

தமிழகத்தில் ஊரடங்கு கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.அழகுமுத்துபாண்டியன், நகர செயலாளர் ஏ.சரோஜா மற்றும் நிர்வாகிகள் கோவில்பட்டி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரகுபதியிடம் வழங்கிய மனுவில், தமிழக மக்களின் நலன் கருதி கரோனா பாதிப்பில் இருந்து மக்களை காக்க 3-வது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏழை, எளிய மக்களை காக்கும் பொருட்டு ஏற்கெனவே மூடப்பட்டுள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகள் மீண்டும் திறக்கக்கூடாது. ஊரடங்கு கால நிவாரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். வேலை உறுதி திட்டத்தில் அரசால் பணி மறுக்கப்பட்டுள்ள 55 வயதானவர்களுக்கு, அதே பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போல் கூலி வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

இதே போல், உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்க வடக்கு மாவட்ட செயலாளர் ரவீந்திரன், மாவட்ட பொருளாளர் வேல்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கிய மனுவில், தமிழகத்தில் மார்ச் 24-ம் தேதி மாலை முதல் மே 17-ம் தேதி வரை 54 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், கால் டாக்ஸி, ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, வானங்களின் தவணையை செப்டம்பர் மாதம் வரை வங்கிகள் வசூலிக்கக்கூடாது. இதனை சிறு, குறு மற்றும் தனியார் நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில் உத்தரவிட வேண்டும். காலாவதியான வாகனங்களின் தகுதிச்சான்று, பர்மிட், பேட்ச், ஓட்டுநர் உரிமம், சாலை வரி ஆகியவற்றை புதுப்பிக்க செப்டம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்க வேண்டும்.

மே 17-ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைந்தாலும், வாடகை கார், வேன் ஓட்டுநர்கள் பழைய நிலைக்கு திரும்ப 6 மாத காலமாவது ஆகும். இதனால் பேட்ஜ் லைசன்ஸ் வைத்துள்ள ஓட்டுநர்களுக்கு நிவாரணமாக ரூ.20 ஆயிரம் தமிழக அரசு வழங்க வேண்டும். அதே போல், தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் குறைந்தபட்சம் 3 மாதத்துக்கு மூட வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 mins ago

இந்தியா

26 mins ago

சுற்றுலா

18 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஓடிடி களம்

9 mins ago

மேலும்