கரோனா தொற்றால் பெரிய பாதிப்பு உருவானால் தியாகங்களுக்கு தயாராக இருக்க வேண்டும்: அரசு ஊழியர்களுக்கு புதுச்சேரி முதல்வர் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றால் பெரும் பாதிப்பு ஏற்பட்டால் அரசு ஊழியர்கள் சில தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல் வர் நாராயணசாமி தெரிவித்துள் ளார்.

புதுச்சேரியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகள் பச்சைப்பகுதி என்றும், புதுச்சேரியில் 5 பகுதிகள் தனி மைப்படுத்தப்பட்டு, 3 பேர் கரோ னோ தொற்றால் பாதிக்கப்பட் டுள்ள காரணத்தால் ஆரஞ்சு பகுதி என்றும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு பகுதியில் எந்தெந்த முறையில் தொழில் நிறுவனங்கள், மற்ற கடைகளை திறப்பது என் பது தொடர்பாக முடிவெடுத்து விதிமுறைகளை மத்திய அரசு வரும் 4-ம் தேதி அறிவிக்க இருக் கிறது. அதன்பிறகு புதுச்சேரி மாநிலத்தில் முடிவு செய்து அறி விக்கப்படும்.

வாரணாசியில் தங்கியிருக்கும் புதுச்சேரி சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த 22 பேர் புதுச்சேரிக்கு திரும்பி வர அனுமதி அளிக்க வேண்டும் என்று நேற்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்துக்கு கடிதம் எழுதியி ருந்தேன். அதற்கு அனுமதி அளித்துள்ளார். அவர்களை அழைத்துவர ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

பயிற்சிக்காக இந்தூர் சென்ற காரைக்காலைச் சேர்ந்த ஜவ ஹர் நவோதயா வித்யாலயா மாணவர்கள் திரும்பிவர அனு மதி அளிக்குமாறு மத்திய பிர தேச அரசிடம் கோரியுள்ளேன். இன்று முடிவு வரும் என்று எதிர பார்க்கிறேன். புதுச்சேரியில் இருந்து மகாராஷ்டிராவுக்கு வேலைக்கு சென்றவர்கள் புதுச் சேரிக்கு அழைத்து வரப்படு வார்கள்.

கரோனா தொற்று இன்னும் ஓராண்டு காலம் படிப்படியாக இருக்கக்கூடும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவு பொருளாதார பாதிப்பும் ஏற்படக் கூடும். அப்படி இருக்கும்பட்சத்தில் அரசு ஊழியர்கள் சில தியாகங் களை செய்ய தயாராக இருக்க வேண்டும். அனைத்துத் தியாகத் துக்கும் அனைத்து தரப்பு மக்க ளும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்