திருவள்ளூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு ஆட்சியர் அழைப்பு: நாளை அம்பத்தூரில் ஆலோசனைக் கூட்டம்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அம்பத்தூரில் நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்துக்கு வருமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பு: தமிழ்நாடு தொலை நோக்கு பார்வை 2023-ன்படி, தமிழகத்தை தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக மாற்றிட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும், அதன் அடிப்படையில் தொழில் வளர்ச்சியை வேகப்படுத்திடவும் வருகிற செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு - 2015 சென்னையில் நிகழ உள்ளது.

இம்மாநாட்டின்போது ஒரு லட்சம் கோடி ரூபாய் வரையிலான தொழில் சார்ந்த முதலீடுகள் தமிழகத்தில் ஏற்படுத்திட தேவையான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில், அனைத்து மாவட்டங்களிலும் 10 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 15 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட வேண்டும் என்று அரசு திட்டமிட்டுள்ளது. அதில், திருவள்ளூர் மாவட்டத்துக்கு 3,500 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தொழில் முதலீடுகளை வரவேற்கும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து, தொழில் முதலீட்டாளர்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தொழில் முனைவோர்கள், படித்த பொறியியல் வல்லுநர்கள், பல்துறையில் ஈடுபட்டுள்ள முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தங்கள் முதலீடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் முதலீடு செய்து தொழில் வளர்ச்சியில் தங்கள் பங்களிப்பை வழங்கிடவேண்டும்.

முதலீட்டாளர்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறு வனங்கள் உற்பத்தி தொடங்கும் வரை தேவையான உரிமங்கள் மற்றும் அனுமதி போன்றவற்றை மாவட்டத்தின் பிற துறை யிடமிருந்து ஒற்றை சாளர முறை யில் பெற்றுத்தர மாவட்டத் தொழில் மையம் ஆவண செய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை கூட்டம்

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை முதலீட்டாளர்கள் தொடங்குவது தொடர்பான கூட்டம் நாளை (11-ம் தேதி) மாலை 3 மணிக்கு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள, அய்மா டெக்னாலஜி சென்டரில் நிகழ உள்ளது. இதில் அனைத்துத்தரப்பு முதலீட் டாளர்களும் பங்கேற்க வருமாறு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

மேலும்