கமலை விமர்சித்த ஹெச்.ராஜா: ஸ்ரீப்ரியா பதிலடி

By செய்திப்பிரிவு

பாந்த்ரா சம்பவம் தொடர்பான கமலின் ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்தார் ஹெச்.ராஜா. தற்போது ஹெச்.ராஜாவின் கருத்துக்கு ஸ்ரீப்ரியா பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியா முழுக்கவே கரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை ஏப்ரல் 14-ம் தேதி காலையில் மோடி வெளியிட்டார். அன்றைய தினம், வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானோர் மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் திரண்டனர். ஆனால், ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், ரயில்கள் இயக்கப்படாது எனவும் தகவல் வெளியானதால் அவர்கள் ஆத்திரமடைந்தனர்.

இவர்களைத் தடியடி நடத்தி காவல்துறையினர் கலைத்தனர். இந்த வீடியோ பதிவுகள் இணையத்தில் வெளியாகின. இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கமல் தனது ட்விட்டர் பதிவில், "அனைத்து பால்கனி மக்களும் தரையைக் கூர்ந்து கவனிக்கவும். முதலில் டெல்லி, தற்போது மும்பை. புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினை என்பது ஒரு டைம் பாம் போன்றது. கரோனாவை விட மிகப்பெரிய இந்தப் பிரச்சினையை வெடிப்பதற்கு முன்பே செயலிழக்கச் செய்தல் வேண்டும். பால்கனி அரசு தரையில் நடப்பவற்றையும் கவனிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

கமலின் இந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில், "பால்கனி அரசா? இந்த அரசு அடித்தட்டு மக்களின் ஆதரவோடு 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால், தனது 65 ஆண்டுக்காலத்தைப் பணம் ஈட்டுவதில் கழித்த ஒரு பால்கனி பையன் இன்று ஏழைகளுக்கு 1.7 லட்சம் கோடி கொடுத்த அரசைப் பற்றி உளறுகிறார். அவமானம்" என்று பதிவிட்டார்.

ஹெச்.ராஜாவின் இந்தப் பதிவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த நடிகை ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பதிவில், "ஹெச் அவர்களே.. இது உங்கள் ட்வீட்டா அல்லது உங்கள் அட்மினின் ட்வீட்டா?. ஹெச் அவர்களே, என் தலைவர் தன்னுடைய கடின உழைப்பால் பணம் ஈட்டினார், யாரையும் ஏமாற்றும் வழியில் வந்தவர் அல்ல. நல்லது. என்னுடைய ட்வீட்டில் கமெண்ட் செய்ய வேண்டுமென்றால் முதலில் மரியாதை கொடுங்கள். அதன்பிறகு உங்கள் துதியைப் பாடுங்கள். தயவுசெய்து நகைச்சுவை வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

தொழில்நுட்பம்

41 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்