சிவகங்கை அருகே உணவின்றி தவித்த இலங்கை தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கவுன்சிலர்

By செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே உணவின்றி தவித்த இலங்கை தமிழர்களுக்கு அப்பகுதி ஒன்றியக் கவுன்சிலர் மகேஸ்வரி கண்ணன் உதவிகரம் நீட்டினார்.

சிவகங்கை அருகே ஒக்கூர் இலங்கை தமிழர் முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்கள் கூலித் தொழில் செய்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கால் இலங்கை தமிழர்கள் தங்கள் குடியிருப்புகளிலேயே முடங்கினர். மேலும் வேலைக்குச் செல்லாததால் உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வந்தனர்.

இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஒன்றியக் கவுன்சிலர் மகேஸ்வரி கண்ணன் இலங்கை தமிழர்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார். அவர் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை உணவுப் பொருட்கள் வழங்க உள்ளார். மேலும் அப்பகுதியில் கிருமி நாசினி தெளிப்பதற்கான கருவியும் இலவசமாக வழங்கினார். அவரது செயலை இலங்கை தமிழர்கள் மனதார பாராட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

35 mins ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

41 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

4 hours ago

மேலும்