அனுமதிக்கப்பட்ட வரைபடத்தை மாற்றியதே மவுலிவாக்கம் கட்டிட விபத்துக்கு காரணம்: நீதிபதி ரகுபதி ஆணைய அறிக்கையில் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அனுமதி அளித்த வடி வமைப்பு திட்டத்தை மாற்றியதே மவுலிவாக்கம் கட்டிட விபத்துக்கு காரணம் என நீதிபதி ரகுபதி ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.

சென்னையை அடுத்த மவுலி வாக்கத்தில் பிரைம் சிருஷ்டி நிறு வனம் சார்பில் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம், கடந்த ஆண்டு ஜூன் 28-ம் தேதி மாலை இடிந்து விழுந்து நொறுங்கியது. இடிபாடு களில் சிக்கி 55 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம் பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் தனது அறிக் கையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி அரசிடம் வழங்கியது. அந்த அறிக்கை, சட்டப் பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு:

கட்டமைப்பு பொறியாளர் நாகேஷ் அளித்த வடிவமைப்புத் திட்ட வரைபடத்துக்கு சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஒப்புதல் வழங்கியது. ஆனால், அதை புறந்தள்ளிவிட்டு, கட்டிடம் கட்டுபவர், ஆலோசகர் விஜய் பர்கோத்ரா வாயிலாக, எஸ்.வெங்கடசுப்ரமணியம் மூலம் புதிய திட்ட வரைபடத்தை பெற்று கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

திட்ட வரைபடத்தில் பாதுகாப் புத் திறன் 150 டன் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. ஆனால், வெங்கடசுப்ரமணியத்தால் நிறைவேற்றப்பட்ட வரைபடத்தில் அது இடம்பெறவில்லை.

ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்ட வரைபடத்தில் 46 தூண்கள் இடம் பெற்றிருந்ததற்கு மாறாக, 37 தூண் கள் மட்டுமே நிறுவப்பட்டுள்ளன. பெரும்பாலான தூண்களின் இறுதி நிலை தாங்கு திறன், மதிப்பீடு செய்யப்பட்ட சுமை அளவைக் காட்டிலும் குறைவாக இருந்தது. இது கட்டிடமும் தூண்களும் இடிந்து விழ வழிவகுத்தது.

இதுபோன்ற பல்வேறு முடிவுகள் அடிப்படையில், ஒவ் வொரு நிலையிலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்ட வரைபடம் மற்றும் கட்டுமான நடவடிக்கை ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு செயல்பட்டதே இந்த சம்பவத்துக்கு முக்கிய காரணமாகும்.

சென்னை பெருநகர வளர்ச் சிக் குழுமத்தால் ஒப்புதல் அளிக் கப்பட்ட அசல் திட்ட வரைபடத்தை தெரிந்தே மீறியுள்ளனர். அதற்கு மாறாக செயல்பட்டுள்ளனர். கட்டுமானத்தின் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை புறந்தள்ளிவிட்டு பெருமளவில் ஆதாயம் பெறும் நோக்கில், அவர்கள் விருப்பத்திற்கேற்றவாறு கட்டுமானப் பணிகள் மேற் கொள்ளப்பட்டதே கட்டிடம் இடிந்து விழுவதற்கு முடிவான காரணம்.

கட்டிடம் தகர்ந்து விழுந்ததற்கு பிரைம் சிருஷ்டி ஹவுசிங் நிறுவன மேலாண் இயக்குநர் மனோகரன், இயக்குநர்கள் எம்.முத்துகாமாட்சி, எம்.பாலகுருசாமி, புதிய கட்டிட வரைபடத்தை தயாரித்த எஸ்.வெங் கடசுப்ரமணியம், கட்டிடக்கலை ஆலோசகர் விஜய் பர்கோத்ரா மற்றும் பொறியாளர்கள் ஆர்.துரைசிங்கம், கே.கார்த்திக், எஸ்.சங்கர் ராமகிருஷ்ணன் ஆகியோரே இதற்கு பொறுப்பு.

இவ்வாறு ஆணையத்தில் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

3 mins ago

க்ரைம்

9 mins ago

க்ரைம்

18 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்