மின் கட்டணங்களை இணையதளம் மூலம் செலுத்த மின் வாரியம் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

மின்வாரிய அலுவலகங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் கிருமிகள் பரவுவதைத் தடுக்க, மின் நுகர்வோர் முடிந்த வரையில் இணையதளம் (www.tangedco.go.in) அல்லது மின்சார வாரிய செயலி (TNEB App)மூலம் கட்டணம் செலுத்தும்படிகேட்டுக்கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் நலன் கருதி மின்நுகர்வோர் தங்கள் குறைகளை தொலைபேசி (எண்.1912) மூலமாகவோ, மின் அஞ்சல் மூலமாகவோ உதவி பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்களை தொடர்பு கொண்டு குறைகளைத் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அனைத்து மின்வாரிய பணம் செலுத்தும் இடங்களிலும் கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் மேற்கொள்ளவும் அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் முழுமையாக கை கழுவுவதைப் பற்றியும், தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் விழிப்புணர்வு எற்படுத்தகேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

58 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்