234 தொகுதிகளிலும் 4 கோடி பேரை சந்திக்க திட்டம்: ‘நமக்கு நாமே’ பிரச்சார பயணத்தை செப். 25-ல் ஸ்டாலின் தொடங்குகிறார்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 4 கோடி மக்களை சந்தித்து குறைகளை கேட்க திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதற்காக செப்டம்பர் 25 முதல் நவம்பர் 8-ம் தேதி வரை ‘நமக்கு நாமே’ என்ற பிரச்சார பயணத்தை மேற்கொள்கிறார்.

இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 4 ஆண்டுகால அதிமுக அரசின் அவலங்களை மக்களிடம் எடுத்துக் கூறவும், தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய ஓர் அரசை உருவாக்கவும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ என்ற பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள குமரி முனையில் இருந்து செப்டம்பர் 25-ம் தேதி தனது பயணத்தை தொடங்கும் அவர், அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் நவம்பர் 8-ம் தேதி நிறைவு செய்கிறார். நிறைவு நாளில் காஞ்சிபுரத்தில் மாபெரும் பேரணி நடைபெறும்.

இந்த 2 மாதங்களும் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஸ்டாலின் செல்லவிருக்கிறார். அப்போது விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், பெண்கள், மாணவர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், தொழில்முனைவோர், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள் என சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரையும் தனித்தனியே சந்தித்து உரையாட இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

19 mins ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்