அகலப்பாதை பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த ராமேசுவரம்-பாலக்காடு ரயில் மீண்டும் இயக்கப்படுமா?- 13 ஆண்டுகளாக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் பயணிகள் 

By என்.சன்னாசி

அகலப்பாதை பணிக்காக நிறுத்தப்பட்ட ராமேசுவரம் - பாலக்காடு பயணிகள் ரயில், பணிகள் நிறைவடைந்தபோதும் பல ஆண்டுகளாக இயக்கப்படா மல் உள்ளன. இதை உடனடி யாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

ராமேசுவரம்-கோவை மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது ராமேசுவரம்-பாலக்காடுக்கு மதுரை, திண்டுக்கல், ஒட்டன் சத்திரம், பழநி, பொள்ளாச்சி வழியாக 4 பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டன.

2004-ம் ஆண்டில் அகலப் பாதைப் பணிக்காக அந்த 4 ரயில்களும் நிறுத்தப்பட்டன. 2007-ல் பணி முடிந்து அகலப் பாதையில் ரயில்கள் இயக்கப்ப டுகின்ற போதிலும் ராமேசுவரம் -பாலக்காடு பயணிகள் ரயில்கள் இயக்கப்படவில்லை. அதே போன்று ராமேசுவரம் - கோவை தினசரி ரயிலும் இயக்கப் படவில்லை.

இதனால் ராமேசுவரம் பகுதியில் இருந்து கேரளா, கோவை, பழநி, ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி செல்லும் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இப்பயணிகள் மதுரை, திண்டுக்கல் சென்று, அங்கிருந்து கோவை, பாலக்காடுக்கு மாறிச் செல்ல வேண்டியுள்ளது. அகலப்பாதைப் பணி முடிந்து 13 ஆண்டுகளாகியும் ராமேசுவரம் - பாலக்காடு பயணிகள் ரயில்கள் இயக்கப்படவில்லை.

ராமேசுவரம்-அஜ்மீர் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் ராமநாதபுரம், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக் கோட்டை, திருச்சி வழியா கச் செல்கிறது. ஆனாலும், மானாமதுரை, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே நிற்கிறது.

ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடியில் நிற் பதில்லை. ராமேசுவரம் - ஹைதராபாத் செல்லும் மற்றொரு வாராந்திர ரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், குடந்தை, சிதம்பரம், விழுப்புரம், திருவண்ணாமலை,ரேணிகுண்டா (திருப்பதி) வரை செல்கிறது.

இந்த ரயிலில் தஞ்சாவூர் பகுதியிலுள்ள கோயில்கள் மற்றும் திருவண்ணாமலை, திருப்பதி செல்வோர் பயணிக்க பொதுப்பெட்டிகள் இல்லை. கூடுதல் கட்டணம் செலுத்தி முன்பதிவுப் பெட்டிகளில் பயணி க்கின்றனர். நடுத்தர மக்கள் திருப்பதி வரை நீண்ட தூரம் பயணிக்க முடியவில்லை.

ராமேசுவரம் - எர்ணாகுளம் இடையே மற்றொரு வாராந்திர ரயில், மதுரை, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி வழியாகச் செல்கிறது. இந்த ரயிலுக்குப் பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருந்தபோதிலும் கடந்த வாரம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற பிரச்சினைகளால் ராமேசுவரம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த ரயில் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இப்பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். அதற்கு மக்கள் பிரதிநிதிகள் முயற்சிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இது குறித்து ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி கூறியதாவது:

ராமேசுவரம் - மதுரை அகலப்பாதையாக மாற்றிய பின், ஏற்கெனவே இயக்கப்பட்ட ராமேசுவரம் - பாலக்காடு பயணிகள் ரயில்களை இயக்க வலியுறுத்துவேன். மீண்டும் இந்த ரயில்கள் இயக்கப்பட்டால் ராமேசுவரம் பகுதியில் இருந்து பழநி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். இது பற்றி ரயில்வே நிர்வாகமும் பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளது.

ராமேசுவரம் - ஹைதராபாத் செல்லும் வாராந்திர ரயிலில் சாதாரண மக்களும் பயணம் செய்யும் வகையில் பொதுப் பெட்டிகளை இணைக்க மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைப்பேன்.

அறந்தாங்கி வழியாக சென் னைக்கு ரயில் இயக்குவது, மயிலாடுதுறை - மதுரை வழியாக அறந்தாங்கி, காரைக்குடி, திருவாரூர் வழியாக ரயில் இயக் குவது பற்றி பரிசீலனையில் உள்ளது, என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்